Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 10, 2023

NPTEL-GATE Portal | கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை இலவசமாக வழங்கும் தளம்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (சென்னை ஐஐடி) என்பிடெல்-கேட் இணையமுகப்பு (gate.nptel.ac.in), கேட் தேர்வுக்கான பாடத் தயாரிப்புகளை இலவசமாக வழங்குகிறது.

என்பிடெல்-கேட் இணையமுகப்பில் 50,700-க்கும் மேற்பட்ட விண்ணப்பப் பதிவுகள் வரப்பெற்றுள்ளன. 16 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற கேட் தேர்வின் உள்ளடக்கங்கள், முந்தைய ஆண்டுகளில் அதாவது கடந்த 2007 முதல் 2022-ம் ஆண்டு வரை இடம்பெற்ற கேள்விகளை இந்த இணையமுகப்பு வழங்குகிறது. இதன் விரிவான தேர்வுத் தயாரிப்புத் திட்டத்தால் கடந்த ஆண்டைவிட குறிப்பிடத்தக்க அளவில் மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டம் (NPTEL) என்பது சென்னை ஐஐடி உள்ளிட்ட பல்வேறு ஐஐடி-க்கள் மற்றும் ஐஐஎஸ்சி பெங்களூரு ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.

பெங்களூரு அமேடியஸ் லேப்ஸ் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இந்த கேட் இணையமுகப்பு ஆகஸ்ட் 2022-இல் தொடங்கப்பட்டது. பொறியியல் பட்டதாரி திறனறித் தேர்வு (GATE) என்பது பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல், கட்டிடக்கலை, மானுடவியல் (Humanities) என பல்வேறு இளங்கலை-நிலைப் பாடங்களில் விரிவான புரிதலுக்கான விண்ணப்பதாரர்களை மதிப்பிடும் தேசிய அளவில் மதிப்புவாய்ந்த தேர்வாகும். கேட் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், சாத்தியமான நிதி உதவியுடன் கூடிய முதுகலை மற்றும் நேரடி முனைவர் பட்டத்திற்கான பாடத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 7 முதல் 10 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வை எழுதுகின்றனர். 2023-ம் ஆண்டில், ஏறத்தாழ 7 லட்சம் மாணவர்கள் கேட் தேர்வுக்குப் பதிவு செய்திருந்தனர், இதில் ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவர்கள் வெற்றிகரமாகத் தகுதி பெற்றனர்.

என்பிடெல்-கேட் இணையமுகப்பின் தாக்கம் குறித்து விவரித்த என்பிடெல்-ஐஐடி மெட்ராஸ்-ன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், "மாதிரித் தேர்வுகள் மற்றும் நேரடி அமர்வுகளில் மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்வது, இணையமுகப்பின் விரிவான தகவல்களைப் பயன்படுத்தி கேட் தேர்விற்கு தயாராவதில் அவர்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. என்பிடெல்-கேட் இணையமுகப்பானது கேட் ஆர்வலர்களுக்கு பல்வேறு அம்சங்களை இலவசமாக வழங்குவதுடன், உயர்தரமுள்ள கல்வியின் உள்ளடக்கத்தை எல்லோரும் பெறும் வகையில் அமைந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

கேட் தரவரிசையில் மிகச் சிறந்த முறையில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னரே தங்களைத் தயார்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். பலர் மிகுந்த பொருட்செலவு செய்து தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும், ஆன்லைன் தளங்கள் மூலமும் பயிற்சித் தேர்வுகளை எழுதுகின்றனர். என்பிடெல்-கேட் இணையமுகப்பு 2007 முதல் 2022 வரையிலான முந்தைய ஆண்டுகளின் கேள்விகளை (PYQs) வழங்குகிறது. 16 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கேட் தேர்வுகளின் தலைப்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.

மின்சாரப் பொறியியல், இயந்திரப் பொறியியல், சிவில் இன்ஜினியரிங், மின்னணு மற்றும் தொலைத்தொர்பு, இயற்பியல், வேதியியல் ஆகிய 6 முக்கிய பாடங்களில் 115 மாதிரித் தேர்வுகளை கடந்த ஆகஸ்ட் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர். கடந்த 15 அக்டோபர் 2023ல் தொடங்கிய தற்போதைய செமஸ்டரில் முந்தைய 6 தேர்வுகளுடன் உயிரிப் பொறியியல் உள்பட 7 பாடங்களில் மொத்தம் 19 மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் எழுதியிருக்கின்றனர்.

நேரடித் தயார்படுத்தும் அமர்வுகளில் அதிகளவில் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். 521 முதல்கட்ட அமர்வுகளில் 3,975 மாணவர்களும், 367 இரண்டாம் கட்ட அமர்வுகளில் 3,321 மாணவர்களும் பங்கேற்றனர். மூன்றாம் கட்ட நேரலை அமர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் அத்தியாவசிய கேட் தலைப்புகளை உள்ளடக்கியதாக இந்த கலந்துரையாடல் பாடங்கள் அமைந்திருக்கின்றன.

2022-ம் ஆண்டில் கேட் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த ராம்பாலாஜி என்பிடெல்-கேட் இணையமுகப்பைப் பற்றியும் அதன் வீடியோ தீர்வுகள், குறிப்புகள், உபாயங்கள், பாடத்திட்டத்திற்கான துல்லியமான உள்ளடக்கத்தைப் பற்றியும் எடுத்துரைத்தார். தலைப்புகள் அடிப்படையிலான தேர்வுகள் மற்றும் வரிசைப்படுத்தப்பட்ட கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்கள் ஆகியவை உதவியாக இருந்ததாகத் தெரிவித்தார்.

கருத்தியல் ஆய்வு மற்றும் கேள்விகளுக்கான தீர்வு போன்றவை உதவிகரமாக இருந்ததாக கேட் தரவரிசையில் 318 இடத்தைப் பெற்ற சாந்தனு தாரா குறிப்பிட்டார். முந்தைய ஆண்டுகளின் கேள்விகள் மற்றும் ஊக்கமளிக்கும் பாடக்குறிப்புகள் ஆழ்ந்த விளக்கங்களுடன் இருந்ததாக கேட் தரவரிசையில் 894 இடத்தைப் பெற்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் கௌரவ் போலாநாத் முங்கேகர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment