Thursday, November 9, 2023

TNPSC : குரூப் - 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும்!

அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், குரூப் - 2 மற்றும் 2 ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்து தேர்வில், கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு தாள் தேர்வு, பிப்., 25ல் நடந்தது. இத்தேர்வை, 51,000த்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இது, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் நடத்தும், முதன்மை எழுத்து தேர்வை எழுதுவோரின் எண்ணிக்கையை விட, மும்மடங்கு அதிகம்.தேர்வு முடிவுகளை வெளியிட, மத்திய அரசின் குடிமை பணி தேர்வாணையம் எடுத்துக் கொள்ளும் கால அளவு, ஐந்து மாதங்கள். எனவே, மத்திய அரசின் தேர்வாணையத்தின் செயல் திறனுக்கு, நம் மாநில அரசின் தேர்வாணையத்தின் செயல் திறன், எந்த வகையிலும் குறைவானது இல்லை.இப்பணி துவக்கப்பட்ட மார்ச் மாதம், தேர்வாணையத்தில் ஒரு கணிப்பொறி ஆய்வகம் மட்டுமே இருந்தது. மேலும் சில எழுத்து தேர்வு விடைத்தாள்களும் திருத்த வேண்டிய நிலை இருந்தது. எனவே, பணிகள் துவங்க சற்றே தாமதமானது.

இதுபோன்ற தாமதம் எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக, 1 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டாவது கணிப்பொறி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

தற்போது, மதிப்பீட்டு பணிகள் மிக விரைவாக நடந்து வருகின்றன; 80 சதவீதத்திற்கு மேல் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள், டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள், முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News