Friday, December 8, 2023

டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை எந்த மாவட்டத்துக்கு?

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி டிசம்பர் 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்கள் அன்றைய தினம் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், பள்ளி, கல்லூரிகளில் அன்றைய தினம் நடத்தப்பட்ட தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் துணை கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என ஆட்சியர் எம்.பிரதீப்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News