Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 5, 2024

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை மொத்தம் 444 பணியிடங்கள்

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) ஒருங்கிணைந்த நிர்வாக சேவைகள் தேர்வுக்கான (COMBINED ADMINISTRATIVE SERVICES EXAMINATION - 2023 (CASE - 2023)) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வு மூலம் முதுநிலை அலுவலர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 444 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 12.01.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 76

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 33 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 47,600 – 1,51,100

Assistant Section Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 368

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 44,900 –1,42,400

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் ஆங்கிலம் மற்றும் பொது அறிவு பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். தேர்வு 2 மணி நேரம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://csir.cbtexamportal.in/என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ 500. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2024

இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.csir.res.in/sites/default/files/2023-12/Detail%20%20Advt.%20-%2008.12.2023.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.

No comments:

Post a Comment