தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தற்போது (பிப். 19) தாக்கல் செய்து வருகிறார்.
பட்ஜெட் நேரம்.. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட் உரை சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் :
11:12 am, 19 பிப்ரவரி 2024
தமிழ்நாடு நீர் வளம் மற்றும் தகவல் மையத்தை ரூ. 30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல்
11:09 am, 19 பிப்ரவரி 2024
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவில் ராக்கெட் தளம் அமையவுள்ள இடம் அருகே விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
11:08 am, 19 பிப்ரவரி 2024
சென்னை போன்று கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 இடங்களில் இலவச வைஃப்பை சேவை வழங்கப்படும்
11:04 am, 19 பிப்ரவரி 2024
விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.
11:03 am, 19 பிப்ரவரி 2024
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் பாரா விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
11:03 am, 19 பிப்ரவரி 2024
அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.
10:59 am, 19 பிப்ரவரி 2024
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கீடு
10:58 am, 19 பிப்ரவரி 2024
ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
10:57 am, 19 பிப்ரவரி 2024
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ. 243 கோடி ஒதுக்கப்படும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் உச்சவரம்பு தொகை ஒரு லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.
10:55 am, 19 பிப்ரவரி 2024
# நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
10:55 am, 19 பிப்ரவரி 2024
# பல்வேறு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ. 2,500 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
10:53 am, 19 பிப்ரவரி 2024
கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
10:52 am, 19 பிப்ரவரி 2024
ரயில்வே, வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் சேர கோவை, மதுரை மண்டலத்தில் விடுதி வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
10:49 am, 19 பிப்ரவரி 2024
கோவையில் அதிநவீன நூலகம் கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்படும்.
10:49 am, 19 பிப்ரவரி 2024
# பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் கல்வியாண்டுக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:48 am, 19 பிப்ரவரி 2024
# பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடியில் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
10:46 am, 19 பிப்ரவரி 2024
#:இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
10:44 am, 19 பிப்ரவரி 2024
# மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களின் பள்ளி, கல்லூரி கட்டணங்கள், விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்.
10:44 am, 19 பிப்ரவரி 2024
மாநிலம் முழுவதும் 10,000 சுய உதவிக் குழுக்கள் புதிதாக உருவாக்கப்படும்.
10:42 am, 19 பிப்ரவரி 2024
# அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
10:40 am, 19 பிப்ரவரி 2024
# அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் வரும் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு
10:38 am, 19 பிப்ரவரி 2024
மகளிர் இலவச பேருந்து திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும்.
10:36 am, 19 பிப்ரவரி 2024
மகளிர் நலன் காக்கும் திட்டங்களுக்காக ரூ.13,750 கோடி நிதி ஒதுக்கப்படும்.
10:33 am, 19 பிப்ரவரி 2024
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:32 am, 19 பிப்ரவரி 2024
பூந்தமல்லி அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
10:31 am, 19 பிப்ரவரி 2024
ஈரோடு, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நொய்யல், வைகை ஆற்றங்கரைகளில் பூங்கா, திறந்தவெளி அம்சங்கள் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10:30 am, 19 பிப்ரவரி 2024
சைதாப்பட்டை முதல் திருவிக பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.
10:29 am, 19 பிப்ரவரி 2024
சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
10:25 am, 19 பிப்ரவரி 2024
தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்டவை வழங்கப்படும்.
10:22 am, 19 பிப்ரவரி 2024
ரூ,365 கோடி மதிப்பில் 2,000 பழைய மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் சீரமைக்கப்படும்
10:20 am, 19 பிப்ரவரி 2024
தமிழகம் முழுவதும் ரூ. 1,000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
10:17 am, 19 பிப்ரவரி 2024
2030-க்குள் தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும். முதல்கட்டமாக 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும்
10:19 am, 19 பிப்ரவரி 2024
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு.
10:17 am, 19 பிப்ரவரி 2024
2030-க்குள் தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும். முதல்கட்டமாக 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும்
10:16 am, 19 பிப்ரவரி 2024
கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுத் திட்டங்களுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு
10:12 am, 19 பிப்ரவரி 2024
தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற 25 நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
Monday, February 19, 2024
TN Budget 2024 - 2025 | முக்கிய அறிவிப்புகள் | Live
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment