Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 19, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.02.2024

குக்கு பொர்ரா





திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : மெய்யுணர்தல்

குறள்:359

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

விளக்கம்:

துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.

பழமொழி :

New brroms sweep well

முதலிலே கெட்டிக்காரன் முடிவிலே சோம்பேறி

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மகிழ்ச்சியின் ரகசியம் சுதந்திரம், சுதந்திரத்தின் ரகசியம் தைரியம். --கேரி ஜோன்ஸ்

பொது அறிவு : 

1. பின்வரும் உயிரினங்களில் கண்கள் இல்லாத உயிரினம் எது?


வௌவால்

மண்புழு 

தேனீ 

எறும்பு 

விடை: மண்புழு


2. மனிதன் சிரிப்பதனைப் போன்று குரல் எழுப்பும் பறவை எது?

விடை: குக்கு பெர்ரா

English words & meanings : 

Anatomy -  the structure of a living thing. உயிரினங்களுடைய உடல் உறுப்புகளின் அமைப்பியல்;

Amber –

a hard clear yellow-brown substance used for making jewellery.அணிகலன்கள் செய்ய பயன்படும் மஞ்சளும் பழுப்பும் நிறம் உள்ள கடின பொருள்


ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை:
களைச்செடி என்று நாம் பிடுங்கி எரியும் செடிகளில் ஒன்றான கானாவாழையே இன்றைய கீரை….ரத்தவிருத்தி, கபநோய்களுக்கு, புண்களுக்கு மற்றும் என்னிலடங்கா நோய்க்கு அருமருந்து இந்த கானாவாழை…இந்த கானாவாழையை நாம் பயன்படுத்தினால் நம் உடல் நோயை கானாததால் இது கானாவாழை என்றழைக்கப்படுகிறது.

நீதிக்கதை

 உபாயம் வென்றது


ஓர் ஊரில் தன்வந்தர் ஒருவர்இருந்தார்.அவரிடம் நிறைய பணம் இருந்தும், யாருக்கும்  ஒரு பைசாகூட  அளிப்பதற்கு அவருக்கு மனம் வருவதில்லை. தனவந்தருக்கு ஒரே ஒரு நண்பர் மட்டுமே இருந்தார். அவர், தனவந்தர் விரும்பியபடி அவருக்கு உடைகள் தைத்துக் கொடுக்கும் தையற்காரர்.

தையற்காரருக்கு வயது முதிர்ந்தது. நோய்வாய்ப்பட்டு ஒருநாள் இறந்து போனார். தனவந்தருக்கு வயதாகியது. அவரும் படுத்த படுக்கையானார். தானும் ஒருநாள் நண்பரைப் போல இறந்து விடுவோம் என்று எண்ணினார்.

தையற்காரருக்கு பன்னிரெண்டு வயதில் ஒரு பேரன் இருந்தான். அவன் தனவந்தரின் கஞ்சத்

தனத்தைப் பற்றி நன்றாக அறிந்திருந்தான். ஒருநாள் அவன் செல்வந்தரைக் காண வந்தான்.

"ஐயா, நான் உங்கள் நண்பராக இருந்த தையற்காரரின் பேரன்” என்றான் அச்சிறுவன்.

தனவந்தர் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டே, "அப்படியா, ரொம்ப சந்தோஷம்" என்றார். பிறகு அவன் வந்த விஷயம் பற்றிக் கேட்டார்.

"ஐயா என் தாத்தா, மிக அருமையாகத் தைப்பார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்

இப்போது இறந்து விட்டார். போகும்போது, ஊசியைக் கொண்டுபோக மறந்து போனார் நீங்கள். வானுலகம் போகும்போது அவருடைய ஊசியை எடுத்துச் சென்று கொடுத்து விடுகிறீர்களா? அப்போதுதான் அவரால் தேவர்களுக்கு உடை தைக்க முடியும்" என்றான்.

"சரி, நீ கொண்டு வா, நான் எடுத்துச் சென்று உன் தாத்தாவிடம் கொடுக்கிறேன்” என்றார் அவர்.

பேரன் சென்று விட்டபின்பு, செல்வந்தர் யோசித்தார். ஊசியை எங்கே வைத்துக் கொண்டு வானுலகுக்குச் செல்வது? சட்டைப்பையில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் உடம்பை எரிக்கும் போது சட்டை எரிந்து போகுமே! சரி, கையில் வைத்துக் கொண்டு போக முடியுமா? முடியாதே உடம்பை எரிக்கும் போது எலும்புதானே மிஞ்சும்? கையிலும் எடுத்துச் செல்ல முடியாது. இப்படி பலவாறாக யோசித்த பின்புதான் தனவந்தருக்கு, ஊசியை எடுத்துச் செல்ல முடியாது என்ற உண்மை புரிந்தது.

மறுநாள் தையக்காரரின் பேரன், தாத்தாவின் ஊசியை எடுத்துக் கொண்டு தனவந்தரிடம் வந்தான்.

"இந்தாருங்கள், பத்திரமாக இதை தாத்தாவிடம் கொடுத்துவிடுங்கள்" என்றான்.

"குழந்தாய் என்னால் இந்த ஊசியை எடுத்துச் "செல்ல முடியாது" என்றார் செல்வந்தர்.

"ஐயா லக்ஷக்கணக்கான உங்கள் சொத்துக்களை எடுத்துச் செல்லும்போது, இந்தச் சிறிய ஊசியை எடுத்துச் செல்ல முடியாதா," என்று சிறுவன் கேட்டான்.

தனவந்தருக்கு புத்தி தெளிந்தது, கண்கள் திறந்தன. அதற்குப்பிறகு, தாம் உயிருடன் இருக்கும் வரை தமது சொத்துகளை தான தர்மத்திலும் ஏழை எளியவர்க்கு உதவுவதிலும் செலவழித்தார். 

இதுவே உணமையான சொத்து. இந்த தானத்தினால் கிடைக்கும் பலன் இறந்தபின்பும் தம்முடன் வரும் என்பதை அறிந்து மகிழ்ந்தார். தையற்காரரின் பேரனும் அவருடைய மனம் மாறியதை அறிந்து தான் செய்த உபாயம் வென்றது என மகிழ்ந்தான்.

இன்றைய செய்திகள்

19.02.2024

*பட்ஜெட்டில் மாபெரும் ஏழு தமிழ்க்கனவு இடம்பெறும் என தமிழக அரசு அறிவிப்பு.

*மூன்று ஆண்டுகளில் 60000 பேருக்கு அரசுப்பணி தமிழக அரசு தகவல்.

*இன்று பட்ஜெட் தாக்கல்; "தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி" என்ற தலைப்பில் லோகோ வெளியிட்டது தமிழக அரசு.

*1865 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நகல் பெறும் வசதி; தொடங்கி வைத்தார் மு க ஸ்டாலின்.

*உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.

Today's Headlines

* Tamil Nadu government announced that "seven great dreams of Tamil" will be included in the budget.

 *Government jobs for 60000 people in three years Tamil Nadu Government information.

 * Budget presentation today;  The Tamil Nadu government has released a logo titled "Beyond Barriers Towards Development".

 *Facility for obtaining copies of documents which are registered since 1865, was started by C.M.Stalin.

 *World Cricket Test Championship: India moved to second place in the points table.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News