Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 22, 2024

மார்ச் 25ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கலெக்டர் உத்தரவு!


பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மார்ச் 25-ம் தேதி திங்கட்கிழமை திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 25ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பையடுத்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், முக்கிய் அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் அன்றைய தினம் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு கொண்டாட்டமாக நடைப்பெறும். திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகவும் விளங்கும் நெல்லையப்பர் கோயில், நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் திருநெல்வேலி என பெயர் வரக் காரணமாகவும் அமைந்துள்ளது.

நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இம்மாதம் 15-ம் தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடியேற்றம் சுவாமி சன்னதியின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. அங்கு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில், பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு வரும் 25-ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பங்குனி உத்திர திருநாள் 25.03.2020 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு பொதுத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை (Local Holiday) நாளாக அறிவிக்கப்படுகிறது.


மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத் தேர்கள் ஏதுமிருப்பின் பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேற்படி 25.03.2024 உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment