Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 27, 2024

எலுமிச்சை சாறுடன் இந்த மூன்றை சேர்த்து குடிக்க வயிற்று கொழுப்பு வேகமாக குறையும்

நாம் வயிற்று கொழுப்பை குறைக்க பல்வேறு வழி முறைகளை பின்பற்றி இருப்போம். இந்நிலையில், நாம் எலுமிச்சை டிடாக்ஸ் தண்ணீர் அல்லது எலுமிச்சை சாறை நாம் எடுத்துகொண்டால், அது நமது வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வாய்ப்புள்ளது.

எலுமிச்சை சாறில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வைட்டமின்ஸ், நார்சத்து உள்ளது. இதனால் இது உடலை சுத்திகரிக்க உதவும். கல்லீரல் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

எலுமிச்சையில் குறைந்த கலோரிகள் உள்ளது. இதில் உள்ள ஆல்கலைன் தன்மை ஜீரணத்திற்கு உதவியாக உள்ளது. பைல் உற்பத்தியை தூண்டுகிறது. இவை உணவை உடைத்துவிடும். வயிற்று உப்புதலை போக்கும். இந்நிலையில் இந்த உணவு பொருட்களை நாம் எலுமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று கொழுப்பு குறையும்.

சியா விதைகள்

இதை நாம் ஊற வைத்து எலுமிச்சை சாறில் சேர்க்க வேண்டும். இவை நார்சத்தை கொடுக்குகிறது. ஜிரணத்திற்கு உதவுகிறது. நமது ரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. அதிக பசியை கட்டுப்படுத்துகிறது. உடல் எடை குறைக்க உதவும். இந்நிலையில் நாம் சீயா விதைகளை, வைட்டமின் சி உள்ள எலுமிச்சை தண்ணீரை உடன் எடுத்துகொண்டால், நமது உடல் அதிக சத்துகளை உள்வாங்கிக்கொள்ளும். இதில் ஓமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. புரத சத்து உள்ளது.

மஞ்சள்

இதில் குர்குமின் என்ற ஆண்டி ஆக்ஸிடண்ட் மற்றும் வீக்கத்திற்கு எதிரான பண்புகளை கொண்டது. இதனால் வயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும். மஞ்சள், மிளகு, சூடான தண்ணீர், எலுமிச்சை சாறு ஆகியவை கலந்து எடுத்துகொண்டால், வயிற்றி உள்ள கொழுப்பு குறையும்.

இஞ்சி

இஞ்சியில், வீக்கத்திற்கு எதிரான பண்புகள், ஆண்டி ஆக்ஸிண்ட பண்புகள் உள்ளது. எலுமிச்சை சாறுடன் இதை சேர்க்கும்போது, ஜீரணத்திற்கு உதவும் என்சைகளை இது தூண்டுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படாது மேலும் குடலின் ஆரோக்கியத்திற்கு உதவும். உடல் எடை குறைய உதவும்.

No comments:

Post a Comment