Friday, March 22, 2024

பள்ளி, கல்லூரி அரசு விடுதிகளுக்கு புதிய கட்டுப்பாடு. இனி இது கட்டாயம். தமிழக அரசு உத்தரவு.!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக பள்ளி மாணவர்கள் விடுதி 8, மாணவிகள் விடுதி 11, கல்லூரி மாணவர் விடுதி இரண்டு மற்றும் மாணவர் விடுதி 3 என மொத்தம் 38 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சுமார் 1833 மாணவ மாணவிகள் தங்கி பயில்கிறார்கள். இதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களுக்கு வழங்கி வரும் நிலையில் தற்போது இங்கு மாணவர்கள் சரியாக வராத காரணத்தால் பகலில் வந்துவிட்டு இரவில் வீடுகளுக்கு செல்வதாக பல புகார்கள் எழுந்துள்ளது. அதே சமயம் பணியாளர்களும் முறையாக பணிக்கு வராமல் உள்ளது போன்ற நடவடிக்கைகளால் தமிழக அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படுகின்றது.

இதனை தடுப்பதற்காக 2024-25 கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது மிஷின்கள் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் மாணவர்கள், விடுதி காப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என அனைவரும் தினமும் காலை மாலை என இரண்டு நேரமும் வருகை பதிவு செய்வது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News