Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 12, 2024

15.04.2024 முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா?

2024 பாராளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அரசு பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகள் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வுகள் முன்கூட்டியே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை தேர்வுகள் 05.03.2024 அன்று முடிவடைந்து மாணவர்களுக்கு முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது

பின்பு தேர்வு தேதிகள் ரம்ஜான் தொழுகை தினத்தில் வருகிறது என்று சில மக்கள் பிரதிநிதிகள் மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் அவர்களிடம் முறையிட்டனர்.

இதனை அடுத்து தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட்டு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் மார்ச் 23 மற்றும் 24 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏப்ரல் 15 முதல் 17ஆம் தேதி வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டுமா கூடாதா என்ற நிலை நிலவுகிறது

இதனை அடுத்து கீழ்க்கண்ட அட்டவணை படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று சில வட்டார கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது மாணவர்களுக்கு விடுமுறை என்பதை உறுதி செய்யுமாறு அலுவலர்கள் கூறியுள்ளனர்

Two weeks க்கான வேலைநாட்கள் விவரம்:

15.04.2024-Monday

16.04.2024-Tuesday

17.04.2024-Wednesday

*ஆசிரியர்களுக்கு மட்டும் பள்ளி உண்டு..

*18.04.2024-Thursday & 19.04.2024-Friday தேர்தல் பணி...

20.04.2023-சனி

21-04-ஞாயிறு- விடுமுறை.

*22.04.2024 மற்றும் 23.04.2024 ஆகிய ‌நாட்களில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.

*24.04.2024 முதல் 4 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை.

*ஆசிரியர்களுக்கு 24.04.2024-புதன்

25.04.2024-வியாழன்

26.04.2024-வெள்ளி வரை பள்ளி உண்டு..

*Last working day 26.04.2024..

No comments:

Post a Comment