Sunday, April 7, 2024

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19ல் கல்லுாரிகள் திறப்பு - தமிழக அரசு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 19ல் கல்லுாரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்.19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லுாரிகளில் ஆண்டு இறுதி தேர்வுகள், பொது தேர்வுகள், செமஸ்டர் தேர்வுகள் முன்கூட்டியே நிறைவு பெறுகின்றன.

இந்நிலையில் பள்ளிகளுக்கு முதற்கட்ட கோடை விடுமுறை இன்று துவங்குகிறது. 4 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப். 22, 23ம் தேதிகளில் மீதமுள்ள இரு தேர்வுகள் மட்டும் நடக்கும்; அதற்கு மட்டும் மாணவர்கள் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லுாரிகள் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 19ல் திறக்கப்படும் என கல்லுாரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை துவங்கும் நாளை அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News