மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் 4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தேர்வுகள் ஏப்.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்வுகள் தள்ளிவைப்பு: இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங் கப்பட்டுள்ளது.
அதேநேரம் ரம்ஜான் பண்டிகைகாரணமாக 4 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதி களுக்கு தள்ளிவைக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு நேற்றுடன் முடிவடைய இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் சற்று தள்ளிப்போனது.
இதற்கிடையே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. மேலும், ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment