வாட்ஸ்அப் கடந்த சில நாட்களாகவே பல்வேறு எண்ணிக்கையிலான அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
வாட்ஸ்அப் பயன்படுத்துவதை எளிதாக்குவது முதல் பிரைவசியை பாதுகாப்பது வரை ஏராளமான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அப்ளிகேஷன் மூலமாக பஸ் டிக்கெட்டுகளை புக்கிங் செய்வதை அனுமதிக்கும் வகையில் மெட்டா AI சாட்பாட் போன்ற மற்றும் பல அம்சங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் தற்போது உங்களுடைய மெசேஜ்களை வகைப்படுத்துவதை எளிதாக மாற்றும் வகையில் மற்றுமொரு அம்சத்தை இன்ஸ்டன்ட் மெசேஜிங் பிளாட்ஃபார்ம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சாட் ஃபில்டர்களை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ்அப் :
நமக்கு தேவையான விஷயங்களை விரைவாக பெறுவதற்கு பல்வேறு அப்ளிகேஷன்களில் ஃபில்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, உங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலைகளை கண்டுபிடிப்பதற்கு LinkedIn ஃபில்டர்களை பயன்படுத்துகிறது. Myntra மற்றும் Amazon போன்ற இ-காமர்ஸ் அப்ளிகேஷன்கள் உங்களுக்கான சரியான ப்ராடக்டுகளை தேர்ந்தெடுப்பதற்கு ஃபில்டர்களை பயன்படுத்துகின்றன.
இன்னும் ஏராளமான அப்ளிகேஷன்களில் ஃபில்டர்கள் ஒரு அம்சமாக பயன்பாட்டில் உள்ளது. இதே அம்சத்தை வாட்ஸ்அப் அப்ளிகேஷன் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சரியான சாட்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். இமெயில்களை வகைப்படுத்துவது போல உங்களுடைய சாட்களையும் இனி உங்களால் வகைப்படுத்த முடியும்.
"வாட்ஸ்அப் அப்ளிகேஷனை மக்கள் பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மெசேஜ்களை முன்பை விட விரைவாக பெறுவது அவசியமாகிறது. இதன் காரணமாக நாங்கள் இன்று சாட் ஃபில்டர்கள் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இனி உங்களுடைய முழு இன்பாக்ஸையும் நீங்கள் ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது." என்று வாட்ஸ்அப் ஒரு செய்தியாளர் வெளியீட்டில் கூறியுள்ளது.
சாட் ஃபில்டர்கள் அம்சம் எவ்வாறு வேலை செய்கிறது?
வாட்ஸ்அப் இப்போதைக்கு மூன்று ஃபில்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது - All, Unread மற்றும் Groups.
இதில் All ஃபில்டர் என்பது டீபால்ட் ஆக உங்களுடைய சாட்கள் அனைத்தையும் எந்த ஒரு ஃபில்டரும் இல்லாமல் காட்டக்கூடியது.
Unread ஃபில்டர் என்பது பெயர் குறிப்பிடுவது போல இதுவரை நீங்கள் படிக்காத அல்லது பதில் அளிக்காத அல்லது unread என்று நீங்கள் குறித்து வைத்த சாட்களை காட்டும்.
அடுத்தபடியாக Groups ஃபில்டர் என்பது உங்களுடைய குரூப் சாட்கள் அனைத்தையும் காட்டக் கூடியது.
இன்று முதல் இந்த அம்சம் யூசர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. வரக்கூடிய வாரங்களில் இது அனைவருக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பின் மெட்டா AI அசிஸ்டன்ட் :
பெரியளவில் பேசப்பட்டு வரும் மற்றொரு அம்சம் மெட்டா AI அசிஸ்டன்ட். இந்த அம்சம் கடந்த ஆண்டு மெட்டா கனெக்ட் 2023 நிகழ்வின்போது அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் பல அமெரிக்க யூசர்களுக்கு AI சாட்பாட் அணுகல் கிடைத்தது. ஆனால் இந்திய யூசர்களால் இதனைப் பயன்படுத்த முடியவில்லை. சமீபத்தில் பல இந்திய யூசர்களுக்கு மெட்டா AI அசிஸ்டன்ட் அம்சத்திற்கான அணுகல் கிடைத்தது. இதன் மூலமாக கேள்விகள் கேட்பது, இமேஜ்களை உருவாக்குவது மற்றும் பல போன்ற விஷயங்களை செய்யலாம்.
No comments:
Post a Comment