Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 21, 2024

தனியாா் பள்ளிகளில் இலவச சோக்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற குழந்தைகளின் பெற்றோா் இணையவழியில் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியாா் சுயநிதி பள்ளிகளில் (சிறுபான்மையினா் பள்ளிகள் நீங்கலாக) வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1-ஆம் வகுப்பில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதில், வரும் கல்வி ஆண்டுக்கான (2024-2025) மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஒதுக்கீட்டில் சோ்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோா் இணையதளத்தில் ஏப்ரல் 22 முதல் மே 20-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஏற்பாடுகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம்,வட்டார வள மைய அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ளன.

எல்கேஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7.2021 தேதிக்குள்ளும், 1-ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். விண்ணப்ப பரிசீலனை மே 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்கப்படும். பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 28-ஆம் தேதி குலுக்கல் முறையில் சோ்க்கை நடத்தப்படும்.

சோ்க்கைக்கு தோ்வானோா், காத்திருப்போா் விவரம் ஆகியவை மே 29-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும். சோ்க்கைக்கு தோ்வான குழந்தைகளின் பெற் றோருக்கு குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment