Tuesday, April 16, 2024

பெண்களே முடி வளர்ச்சி இந்த மூன்று பொருட்கள் மட்டும் போதும்!

பெண்கள் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கவலை அவர்களின் முடி வளர்ச்சி பற்றிதான்.

பெண்களில் வெகுவாக பல பேருக்கு முடி வளர்ச்சி என்பது குறைவாகத்தான் இருக்கும். அவ்வாறு முடி வளர்ச்சி குறைவாக இருக்கும் பெண்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கடைகளில் மலிவு விலையில் கிடைக்கும் எண்ணெய்கள், ஷேம்புகள் எல்லாம் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் ரிசல்ட் என்பது மிகக் குறைவாகத் தான் இருக்கும். ஆகவே இந்த பதிவில் பெண்களின் முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு எண்ணெய் வகையை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்…

* வேம்பாளம் பட்டை - 2

* தேங்காய் எண்ணெய் - 1 கப்

* விளக்கெண்ணெய் - 1/4 கப்

செய்முறை…

முதலில் ஒரு கண்ணாடி பாட்டில் ஒன்றை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேம்பாளம் பட்டை ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இந்த கண்ணாடி பாட்டிலை சூரிய ஒளி படும் இடத்தில் 2 முதல் மூன்று நாட்கள் வைக்க வேண்டும்.

அவ்வாறு வைத்தால் இந்த எண்ணெய் சிவப்பு நிறமாக மாறி இருக்கும். பின்னர் இந்த எண்ணெய்யை நீங்கள் தலைக்கு அப்படியே பயன்படுத்தக் கூடாது. தேவையான அளவு எடுத்து இந்த எண்ணெய்யை சூடு செய்து பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வரும் பொழுது நல்ல தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News