Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 16, 2024

சீரக நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்


கோடை வெளியில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெளியே சென்றாலே சூரியன் நமது தலையில் ஸ்ட்ராவைப் போட்டு நமது ஆற்றலையும், நீரையும் உறிஞ்சிவிடுகிறது.

எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடனும், ஆற்றலுடனும் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதற்கு வெறும் நீரை மட்டும் குடித்தால் போதாது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும், அதே சமயம் கோடையில் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்ட பானங்களைத் தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த பானம் தான் சப்ஜா விதை கலந்த சீரக நீர்.

என்னது, சீரக நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடிக்கலாமா என்று நீங்கள் கேட்கலாம். சொல்லப்போனால் கோடையில் சீரக நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடிக்கும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இப்போது சப்ஜா விதைகளை சீரக நீரில் கலந்து குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

சீரக விதையில் உள்ள சத்துக்கள்

சீரக விதைகளில் இரும்புச்சத்து, மாங்கனீசு, மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டன் ஈ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும் இந்த விதைகளில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் பீனோலிக் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்களை நடுநிலையாக்கி, உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. கூடுதலாக சீரக விதைகளில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை செரிமானத்தை சீராக்கி, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. முக்கியமாக சீரகத்தில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவு என்பதால் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

சப்ஜா விதையில் உள்ள சத்துக்கள்

சப்ஜா விதைகள் என்பவை துளசி விதைகளாகும். இந்த சிறிய விதைகளில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் கே, கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகமாக உள்ளன. மேலும் இந்த விதைகளில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. அத்துடன் கலோரிகளும், கார்போஹைட்ரேட்டுகளும் இதில் குறைவு. இப்படிப்பட்ட சப்ஜா விதைகளை சீரக நீரில் கலந்து குடிப்பதால் இருமடங்கு நன்மைகளை பெறலாம். இப்போது அது என்னென்ன நன்மைகள் என்பதைக் காண்போம்.

1. நீரேற்றம்

கோடைக்காலத்தில் உடல் விரைவில் வறண்டு போகும். ஆனால் சீரக நீரில் சப்ஜா விதைளை ஊற வைத்து கலந்து குடிப்பதன் மூலம், உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் நீரேற்றத்துடன் இருக்கும். எனவே எளிய வழியில் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்க நினைத்தால், இந்நீரைக் குடிக்கலாம்.

2. உடல் சூடு

சீரக நீர் மற்றும் சப்ஜா விதைகள் ஆகிய இரண்டிலுமே குளிர்ச்சிப் பண்புகள் உள்ளன. கோடையில் உடல் சூடு பிரச்சனையால் நிறைய பேர் அவதிப்படுவார்கள். இந்நிலையில் சீரக நீரில் சப்ஜா விதைகளை ஊற வைத்து குடிப்பதன் மூலம், உடல் சூடு பிடிப்பதைத் தடுக்கலாம்.

3. செரிமானம் மேம்படும்

பொதுவாக சீரக நீர் செரிமான பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. அதே சமயம் சப்ஜா விதைகள் வயிற்றை இதமாக வைத்துக் கொள்ளும். இவ்விரண்டையும் ஒன்றாக எடுக்கும் போது, அது அஜீரக கோளாறு, வயிற்று உப்புசம், அசிடிட்டி போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

4. எடை இழப்பு

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், கோடையில் உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காண நினைத்தால், சீரக நீரில் சப்ஜா விதைகளை சேர்த்து குடியுங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிறும் நீண்ட நேரம் நிறைந்து இருக்கும். இதன் விளைவாக கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறையும்.

5. நச்சுக்கள் வெளியேறும்

பொதுவாக சீரக நீரைக் குடித்தால், அது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற பெரிதும் உதவி புரியும். இந்நிலையில் அந்நீருடன் சப்ஜா விதைகளையும் சேர்த்துக் கொள்ளும் போது, உடல் இன்னும் திறம்பட சுத்தமாகும்.

6. வெப்பம் தொடர்பான கோளாறுகள்

கொளுத்தும் வெயிலால் பலவிதமான வெப்பம் தொடர்பான கோளாறுகளால் நிறைய பேர் அவதிப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் சீரக நீரில் சப்ஜா விதைகளை கலந்து குடிக்கும் போது, அது வெப்ப வாதம், நீரிழப்பு போன்ற வெப்பம் தொடர்பான உடல்நல கோளாறுகளில் இருந்து விடுபடலாம்.

No comments:

Post a Comment