Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, April 8, 2024

உயர்கல்வியில் தரத்தை எட்ட கல்லூரிகளில் மாணவர் ஊக்குவிப்பு திட்டங்கள்: துணைவேந்தர்களுக்கு யுஜிசி உத்தரவு


உயர்கல்வியில் தரத்தை எட்டும்வகையில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துமாறு துணைவேந்தர்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலாளர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ளசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயர்கல்வியில் தரத்தை எட்டும் வகையில், கல்லூரிகளில் மாணவர் ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த யுஜிசிஆணையிட்டுள்ளது. இத்திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விரைவில் புதிய கல்வி ஆண்டு தொடங்க இருப்பதால் மாணவர் ஊக்குவிப்பு திட்டங்களை கல்விநிறுவனங்களில் செயல்படுத்துமாறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மாணவர் ஊக்குவிப்பு தொடர்பான செயல்திட்டங்கள் மற்றும் போட்டோ, வீடியோ பதிவுகளை யுஜிசி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அனைத்து கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment