கோடைக்காலத்தில் சன் ஸ்க்ரீன் போல கற்றாழையின் ஜெல்லை சருமத்தின் மேற்பகுதியில் தடவிக்கொண்டால், சூரியக்கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
நிறம் மாறுவதையும் தடுக்கும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதமும் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லை இரவில் முகத்தில் தடவினால் முகம் ஈரப்பதமாக இருக்கும். சருமம் பொலிவுடன் மென்மையாகும். சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்கும்.
குறிப்பாக, பருக்கள் வெடிக்கத் தயாராக இருக்கும்போது முகத்துக்கு கற்றாழையைப் பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
கூந்தல் வளர்ச்சிக்காகவும் கற்றாழையால் தலைக்கு மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவைத்த பிறகு அலசி விடலாம். இதனால் மண்டைப்பகுதியில் உள்ள பொடுகு, பூஞ்சைகள் பாதிப்பு போன்றவை நீங்கும்.
கற்றாழை கூந்தல் நலனுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. முடியின் வளர்ச்சியைத் தூண்டும். நன்கு ஈரப்பதம் மற்றும் ஊட்டமளித்து முடி உடைவதைத் தடுக்கிறது. தலைமுடிக்கு கற்றாழையானது கண்டிஷனர் போல உதவும்.
எண்ணெயில் இந்த ஜெல்லை மிக்ஸ் செய்தும் தலைமுடியில் தடவலாம். இதில், 'புரோட்டி யோலிட்டிக் என்ஸைம்' (Proteolytic enzyme) உள்ளது. இந்த என்ஸைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி கூந்தலின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து வளர்ச்சியைத் தூண்டுகிறது.
இதனால் கூந்தல் உதிர்வு தடுக்கப்பட்டு கூந்தல் நன்றாக வளர பயன்படுகிறது. முகத்துக்கு ஃபேஸ் பேக் போடுவது போல தலைக்கும் கற்றாழையை வாரம் ஒருமுறை ஹெட் பேக்காக போடலாம்.
குழந்தை பெற்ற பெண்களுக்கு தோள்பட்டை, தொடை, வயிறு, மார்பு பகுதிகளில் வரிவரியாகத் தழும்புகள் ஏற்படும். இதைப் போக்க தினமும் கற்றாழையின் சதையை எடுத்துத் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் தழும்புகள் மறையும்.
No comments:
Post a Comment