Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 24, 2024

TNPSC - பள்ளிக்கல்வி உட்பட 3 துறைகளின் தேர்வு முடிவுகள் வெளியீடு.


பள்ளிக்கல்வி, அறநிலையம், கருவூலங்கள் ஆகிய 3 துறைகளின் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

பள்ளிக்கல்வி துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பணியில் 11 காலி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு கடந்த 2023 நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்வை 111 பேர் எழுதினர்.

இந்நிலையில், தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில், அடுத்த கட்டமான நேர்காணலுக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலர் (கிரேடு-1) பணியில் 9 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி 6, 7-ம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், நேர்காணலுக்கு 25 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருவூலங்கள், கணக்கு பணிகளில் 52 காலி இடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி 5, 6-ம் தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இதில், கணினிவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு 120 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட 3 தேர்வுகளில் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News