தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2023-2024ஆம் ஆண்டிற்க்கான +1 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி தொடங்கி மார்ச் 25 ம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வை மொத்தம் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதி உள்ளனர். இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு தற்போது வெளியாகி உள்ளது.
தற்போது வெளியாகி உள்ள இந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் மொத்தம் 91.17% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக மாணவர்களை விட, மாணவிகளே 7.43% சதவீதம் பேர் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய +1 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மதிப்பெண் விபரங்களைத் தெரிந்துக் கொள்ள மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு உள்நுழைந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் SMS மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் ஏற்படும் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment