பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படப்பட்டது. 241 அரசுபள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 8,11,172 பேர் தேர்வு எழுதினர். இதில் 7, 39, 539 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்தம் 91.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு 90.93 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 91.17 சதவீத பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 241 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்
* அரசுப்பள்ளிகள்- 85.75%
* அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 92.36%
* இருபாலர் பள்ளிகள்- 91.61%
* பெண்கள் பள்ளிகள்- 94.46%
100க்கு 100 பெற்றவர்கள்
* தமிழ்- 8
* ஆங்கிலம்- 13
* இயற்பியல்- 696
* வேதியியல்- 493
* உயிரியல்- 171
* கணக்கு பதிவியல்-415
* பொருளியல்-741
* கணினி பயன்பாடுகள்- 288
* வணிக கணிதம், புள்ளியியல்- 293
பாடப்பிரிவு வாரியாக தேர்ச்சி விகிதம்
* அறிவியல்-94.31%
* வணிகவியல்- 86.93%
* கலைப்பிரிவு- 72.89%
* தொழிற்பாடம்- 78.72%
கோவை முதலிடம்
பள்ளிகள் அளவில் 96.02 சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை முதல் இடத்தையும், 95.56 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் 2வது இடத்தையும், 95.23 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
இணையதளம்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இன்று, www.dge.tn.gov.in இணையதளத்திற்கு சென்று, தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அடையாள எண் மற்றும் பாஸ்வேர்டு பயன்படுத்தி, பிளஸ் 1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை, காலை 10:00 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதன்மை கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்திற்கான, அனைத்து பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கையை, இன்று காலை 10:00 மணிக்கு, தங்கள் அடையாள எண், பாஸ்வேர்டு பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment