Join THAMIZHKADAL WhatsApp Groups

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது.
அதனால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
UIDAI ஆணையத்தால் வழங்கப்படும் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயமாகும். அப்போது தான் அதில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருக்கும்.
இதில் சில தகவல்களை ஆதாரம் ஆணைய இணையதளம் மூலமாக நாமே இலவசமாக புதுப்பிக்கலாம். புகைப்படம் மாற்றம் போன்றவற்றை ஆதார் ஆணையம் அல்லது இ சேவை மையத்திற்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி மாற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment