Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 15, 2024

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கை?



12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பு நாளை நடைபெறும் அமைச்சர்கள் கூட்டத்தில் வெளியிட வேண்டுமென்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்துள்ளது.

அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பகுதி நேர ஆசியர்கள் செயல்பட்டு வருகின்றனர். கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக் கலை, கட்டிடக் கலை, வாழ்வியல் திறன் ஆகியவற்றை கற்றுத் தரும் இவர்களுக்கு 12,500 ரூபாய் மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

13 ஆண்டுகளாக பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது ரூபாய் 12,500 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக உருவாக்கும் பகுதி நேர ஆசிரியர்கள், குறைந்த சம்பளத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும்.? குறிப்பாக மே மாதம் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் இல்லை என்பதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

4-10-2023 அன்று பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்த 10 லட்சம் மருத்துவ காப்பீடுக்கு இன்னும் அரசாணை வெளியிடவில்லை. மருத்துவ காப்பீடு வழங்கினால் 12 ஆயிரம் குடும்பங்கள் பயன் அடைவார்கள். வாரம் மூன்று அரைநாட்கள் என மாதத்திற்கு 12 அரைநாட்கள் மட்டுமே பணி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கும், பகுதிநேர ஆசிரியர்களுக்கும் கல்விப்பணி பாதிக்கிறது. எனவே, அனைத்து வேலை நாட்களுக்கும் நீட்டித்து, முழுநேரமும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்தால் 10 லட்சம் வழங்க வேண்டும். இது அந்த குடும்பங்களுக்கு ஒரு உதவியாக இருக்கும்.

பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். வெகு தொலைவில் செல்வோர் இதனால் பயனடைவார்கள். 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் மேம்பட தற்காலிகமாக நிலையில் 13 ஆண்டாக செய்து வருகின்ற இந்த வேலையை நிரந்தரப்படுத்த வேண்டும்.

எனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறும் (13.08.2024) அமைச்சரவை கூட்டத்தில், 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment