Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 18, 2024

ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!


கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த இலவச மருத்துவ காப்பீடு திட்டமான "ஆயுஷ்மான் பாரத் யோஜனா" மூலம் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய் பரவலின் தீவிரம் அதிகமாக உள்ள இந்த காலத்தில் லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுவது ஏழை மக்களால் முடியாத காரியமாகும்.முன்னெச்சரிக்கையாக சிலர் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து விடுகின்றனர்.ஆனால் அன்றாட வாழ்க்கையையே நகர்த்த முடியாமல் திண்டாடும் மக்களால் பணம் செலுத்தி காப்பீடு எடுப்பது என்பது முடியாத விஷயமாகும்.இதனால் மத்திய அரசு "ஆயுஷ்மான் பாரத் யோஜனா" என்ற திட்டத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கி வருகிறது.இந்த திட்டத்திற்கு சுமார் 8000 கோடி வரை ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.தமிழகத்தில் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைத்து மத்திய அரசின் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆயுஷ்மான் பாரத் அட்டை பெறுவதற்கான தகுதிகள்:

1)ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

2)பிறப்படுத்தப்பட்ட வகுப்பை சேந்தவர்கள் மட்டுமே இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய முடியும்.

3)தொழிலாளர் அட்டை உள்ளவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

முதலில் மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.அதன் பின்னர் ABHA என்ற எண்ணை பெற உங்கள் ஆதார் விவரங்களை கொடுக்க வேண்டும்.

பிறகு ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரக் கூடிய OTP எண்ணை பதிவிட்டு உள் நுழையவும்.பிறகு உங்கள் விவரங்களை பதிவு செய்தால் உங்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு அட்டை தோன்றும்.அதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.தனியார் மருத்துவ காப்பீடு அட்டை வாங்க முடியாதவர்கள் மத்திய அரசு வளங்கக் கூடிய இலவச காப்பீட்டு அட்டையை பெற்று பயன் பெறலாம்.

No comments:

Post a Comment