Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 24, 2024

தமிழக அரசு துறைகளில் 861 காலியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டெக்னீசியன், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், சர்வேயர் போன்ற 861 காலியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் செப்டம்பர் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: உதவி சோதனையாளர் - 2

பணி: உதவி பயிற்சி அலுவலர்(சுருக்கெழுத்து ஆங்கிலம்) - 3

பணி: திட்ட உதவியாளர் நிலை-II - 3

பணி: இயக்கூர்தி ஆய்வாளர் நிலை-II - 45

பணி: வரைவாளர் நிலை-II - 183

பணி: விடுதிக் கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் - 2

பணி: இளநிலை வரைதொழில் அலுவர் - 127

பணி: இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் - 2

பணி: சிறப்பு பணிப்பார்வையாளர் - 22

பணி: அளவர் - 15

பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 10

பணி: உதவி வேளாண்மை அலுவலர் - 25

பணி: மேற்பார்வையாளர் -4

பணி: தொழில்நுட்ப உதவியாளர் - 15

பணி: செயற்பணியாளர்(ஆய்வகம்) - 9

பணி: தொழில்நுட்பவியலாளர் - 79

பணி: வரைவாளர்

பணி: அளவர் மற்றும் வரைவாளர் - 42

வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32-க்குள்ளும், அதே பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42-க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50-க்குள்ளும், பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினர்களான எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் ஆதரவற்ற விதைகளுக்கு உச்ச வயதுவரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: டிஎன்பிஎஸ் நடத்தும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் பணிக்குரிய முதன்மைத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: தமிழ் மொழித் திறனாய்வுத் தேர்வு: 9.11.2024

முதன்மைத் தேர்வு நடைபெறும் நாள்: 11.11.2024 முதல் 14.11.2024

தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரங்களை டிஎன்பிஎஸ் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.9.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment