Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 26, 2024

கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? ஆசிரியர் கூட்டணி அறிக்கை!!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கலைத் திருவிழா நடத்துவதா?காலாண்டுத் தேர்வு நடத்துவதா? பள்ளிக் கல்வித்துறை முடிவினை அறிவிக்க வேண்டும்...


AIFETO.….. 26-08-2024

தமிழக ஆசிரியர் கூட்டணி அரசு அறிந்தேற்பு

எண்:36/2001

மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுடனும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனும் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள் இன்று மாலை செல்லிடை பேசியில் தொடர்பு கொண்டு கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்கு பெறுவதாக EMIS - ல் பதிவு செய்ய வேண்டும் என்று மாநில ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் வலியுறுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் 2 இலட்சம் மாணவர்கள் இருக்கிறார்கள், அந்த இரண்டு இலட்சம் மாணவர்களையும் கலைத் திருவிழா நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என திருச்சி மாவட்ட திட்ட அலுவலகத்திலிருந்து அவர்கள் தகவல் அனுப்பி உள்ளார்கள்

அறிவிப்புக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் உள்ள புரிதலைக் கூட தெரியாதவர்கள் ஆண்டுதோறும் காலாண்டுத் தேர்வு நேரத்தில்தான் இந்த கலைத் திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டு நடத்தி வருகிறார்கள்.

கலைத் திருவிழா நிகழ்ச்சி வரவேற்க வேண்டிய நிகழ்ச்சியாக இருந்தாலும் 20 நாட்கள் பயிற்சி நடத்துகின்ற பொழுது மாணவர்களுக்கு பாடம் எப்படி நடத்துவது? காலண்டுத் தேர்வு அவர்கள் எப்படி எழுதுவார்கள்?

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் மாணவர்களின் கல்வி நலனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இத்தகவலினை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களின் தனிப் பார்வைக்கு உடன் கொண்டு செல்ல வேண்டுமாய் மதிப்புமிகு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பொறுப்பில் உள்ள முனைவர் திரு. முத்து பழனிச்சாமி அவர்களிடமும், தொடக்கக்கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் திரு. கு .ஆ. நரேஷ் அவர்களிடமும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்களும் உடன் தொடர்பு கொள்வதாக நம்மிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம்!!!

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News