மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணியில் நியமிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அரசுத் துறைகளில் உயர் பதவிகளுக்கு நேரடித் தேர்வு முறை (லேட்ரல் என்ட்ரி) ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment