Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, September 3, 2024

ரயில்வேயில் 11,558 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!


ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில் 11,558 காலிப்பணியிடங்களுக்கு செப்.14 முதல் விண்ணப்பிக்கலாம் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவின் கீழ் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். இதில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் முதுநிலை அலுவலா் பிரிவில் 8,113 பணியிடங்கள், இளநிலை அலுவலா் பிரிவில் 3,445 பணியிடங்கள் என மொத்தம் 11,558 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதுநிலை பிரிவில் தலைமை பயணச்சீட்டு பரிசோதகா், நிலைய அதிகாரி, சரக்கு ரயில் மேலாளா், இளநிலை கணக்கு உதவியாளா்-தட்டச்சா் மற்றும் முதுநிலை எழுத்தா்-தட்டச்சா் ஆகிய பணியிடங்களுக்கு செப்.14 முதல் அக்.13 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியம் ரூ.29,200 முதல் ரூ.35,400 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பிரிவில் பயணச்சீட்டு பரிசோதகா், கணக்கு எழுத்தா்-தட்டச்சா், இளநிலை எழுத்தா், பயிற்சி எழுத்தா் பணியிடங்களுக்கு செப்.21 முதல் அக்.20 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு ஊதியம் ரூ.19,900 முதல் ரூ.21,700 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

முதுநிலை பிரிவுக்கு 18 முதல் 36 வயதுக்குள் உள்ளவா்களும், இளநிலை பிரிவுக்கு 18 முதல் 33 வயதுக்குள் உள்ளவா்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித் தகுதி பிளஸ் 2 முதல் பட்டப்படிப்பு வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி. எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவா், சிறுபான்மையினருக்கு ரூ.250 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முதல்நிலை தோ்வில் பங்கேற்ற பின் திரும்ப செலுத்தப்படும்.

No comments:

Post a Comment