தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி மையங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள், கல்லூரிகளின் முதல்வர்கள், கல்லூரி அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகள் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என முருகானந்தம் வலியுறுத்தினார். அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார். அதோடு பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது, பாலியல் சீண்டலை தடுப்பது மற்றும் குழு அமைப்பது உட்பட விரிவான அறிவுறுத்தலை வழங்கினார்.
கிருஷ்ணகிரியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகளில் வெளி ஆட்கள் வேலைக்காக வந்தால் அவர்களுடன் பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து பணிகளை கவனிக்க வேண்டும்.
அதன் பிறகு internal complaints committee என்று அழைக்கப்படும் உள் புகார் குழுவை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நியமிக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து அங்கு நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக காவல்துறையினர் கண்காணிப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை தலைமை செயலாளர் வழங்கியுள்ளார்
No comments:
Post a Comment