
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் காரணமாக, பெரும்பாலானோருக்கு உண்டாகும் உடல் நல பிரச்சனைகளில் ஒன்று, இரத்த சர்க்கரை நோய் என்னும் நீரிழிவு.
இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் நிலை, ப்ரீடியாபயாட்டீஸ் (Prediabetes) என அழைக்கப்படுகிறது. ப்ரீடியாபயாட்டீஸ் நிலையை கண்டறியப்படுவது மிகவும் முக்கியம். ஏனெனில் இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும், இந்த நிலையை சரியாக கண்டறிந்து சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.
டாக்டர் ரியா ஷர்மா இது குறித்து கூறுகையில், ப்ரீடியாபயாட்டீஸ் நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றார். பின்னர் இது டைப் 2 நீரிழிவு நோயாக உருவெடுக்கலாம் என்கிறார். பொதுவாக, நீரிழிவு நோயின் ஆரம்ப நிலைகளில் குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என அவர் கூறூகிறார்ட்.
இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது உடலில் தோன்றும் அறிகுறிகள் (ப்ரீடியாபயாட்டீஸ் அறிகுறிகள்)
ப்ரீடியாபயாட்டீஸ் அறிகுறிகள் பெரும்பாலும் மிக குறைந்த அளவில் இருக்கும் என்பதால், பொதுவாக அவை புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் சோர்வு, பலவீனம், அடிக்கடி அதிக தாகம் எடுத்தல், பசி அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடல் எடை காரணமில்லாமல் குறைதல் போன்ற சிறிய பிரச்சனைகளை புறக்கணிக்காம்னல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர் சர்மா. இந்த அறிகுறிகள் தென்பட்டால், இரத்த சர்க்கரை அளவை உடனடியாக பரிசோதிக்க வேண்டும் என அவர் எச்சரிக்கிறார்.
ப்ரீடியாபயாட்டீஸ் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை
வழக்கமான பரிசோதனை மூலம், ப்ரீடியாபயாட்டீஸ் கண்டறியப்படுவது மட்டுமல்லாமல், அதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும் முடியும்.சரியான நேரத்தில் பரிசோதனை செய்வதும் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்வதும் அவசியம். குறிப்பாக குடும்பத்தில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இருந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதனை செய்வது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான நேரத்தில் கவனம் செலுத்தினால் ப்ரீடியாபயாட்டீஸ் வராமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோய் வராமல் இருக்க கடைபிடிக்க வேண்டியவை
உணவுமுறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் ப்ரீடியாபயாட்டீஸ் அபாயத்தைக் குறைக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் முதல் அறிவுரையே, அவர்கள் தங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான். ஏனெனில் இவை இரண்டின் மூலம் தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுபடுத்தும் உணவுகளை உட்கொள்வதன் மூலம் சுகர் லெவலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீரிழிவு நோயை தடுக்கும் உணவு முறைகள்
ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். முழு தானியங்கள், புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும், துரித உணவுகளிலிருந்து விலகி இருப்பதன் மூலமும் சர்க்கரை நோய் வராமல் முடியும். ப்ரீடியாபயாட்டிஸை சரியான நேரத்தில் கண்டறிந்து தடுப்பதன் மூலம் நீரிழிவு நோயைத் தடுப்பது மட்டுமல்லாமல், இதய நோய், சிறுநீரகப் பிரச்சினைகள் மற்றும் கண் நோய்கள் போன்ற பிற உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் தப்பிக்க்லாம் என்று மருத்துவர் ரியா உறுதியாக கூறினார்.



No comments:
Post a Comment