
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு தொடர் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், லட்சக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள், இதனால் நெரிசல் ஏற்பட்டு சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படும். மேலும் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.
இதனை கருத்தில் கொண்டு டோல்கேட்களில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 29, 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தால், டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பதை தவிருங்கள் என்று நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, வாகன நெரிசலை தவிர்க்க சென்னை – திருச்சி இடையே சுங்கக்கட்டணம் வசூல் ரத்து செய்யப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை முகமையின் பிராந்திய அலுவலர் வீரேந்திர சம்பியால் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment