தமிழகத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு கருணாநிதி கடன் உதவி திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது.
இவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வரையில் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தற்போது பார்ப்போம். இந்த திட்டத்தில் 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கும் நிலையில் 7% வட்டியில் 20 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுவதோடு கடன் வாங்கும் தொழில் முனைவோர்கள் 600 புள்ளிகள் சிபில் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் கடன் பெறும் நிறுவனங்கள் கடன் பெரும் ஆண்டிலிருந்து முந்தைய இரண்டு ஆண்டுகளில் நல்ல வருமானத்தை பெற்றிருக்க வேண்டும். இந்த கடன் உதவியை தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கியின் கீழ் உள்ள தாய்கோ நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தமிழக அரசு இந்த திட்டத்திற்காக இந்த வருடத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
No comments:
Post a Comment