தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இமெயில் ஐடி உருவாக்கி தரவேண்டும் என்று தற்போது பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இமெயில் ஐடி உருவாக்கி அதனை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் பொறியியல், பாலிடெக்னிக், தொழிற்கல்வி கல்லூரிகளில் மாணவர்கள் சேரவும், பாடத்திட்ட தகவல்கள், தேர்வுகள், விடுதிகள் மற்றும் சுற்றறிக்கை பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே மாணவர்கள் அனைவருக்கும் இமெயில் ஐடி கண்டிப்பாக உருவாக்க வேண்டும். மேலும் இதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment