இதயம் சீராக இயங்க வேண்டுமெனின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
எல்.டி.எல் எனப்படும் உயர் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும்.
இவற்றை தடுப்பதற்கு மருந்து வில்லைகளை எடுத்து கொள்வதை விட நல்ல கொலஸ்ரோல் அடங்கிய உணவுகளை கொண்டு கெட்ட கொலஸ்ரோலை இல்லாமாக்குவது சிறந்த அணுகுமுறையாகும்.
அந்த வகையில், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் உணவுகள் என்னென்ன என்ற விவரத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்ரோலை குறைக்கும் உணவுகள்
1. அவகேடோ பழம் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த மருந்தாகும். இந்த பழத்தில் இதயத்தை பாதுகாக்கும் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது ஆய்வுகள் மூலம் தெளிவாகியுள்ளது. அதே சமயம் நல்ல கொழுப்பான HDL ஐ அதிகரிச் செய்கிறது.
2. பாதாம் போன்ற நட்ஸ்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாக பார்க்கப்படுகின்றது. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்துடன் கூடிய மோனோசாச்சுரேட்டட் நல்ல கொழுப்புகளாக உள்ளது. இது உடலுக்குள் சென்று கெட்ட கொலஸ்ரோல் அளவை கட்டுபடுத்துகின்றது. தினமும் 4-5 பாதாம் பருப்பை இரவில் ஊறவைத்து அடுத்தநாள் காலையில் அந்த நீருடன் சேர்த்து குடிக்கலாம்.
3. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது ஆலிவ் எண்ணெய் சிறந்த வழியாக உள்ளது. அத்துடன் ஆலிவ் எண்ணெய் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் உணவுகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ரோலை குறைக்கிறது.
No comments:
Post a Comment