Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்படவுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே. இ.ஆ.ப.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் சார்பாக கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவருக்கு சிலை நிறுவி 25 வது வெள்ளி விழா ஆண்டு 01 ஜனவரி 2025 வருவதை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி 28.12.2024 அன்று நடத்தப்படவுள்ளது.
அதற்கான முதல்நிலை தேர்வு மாவட்ட அளவில் 21.12.2024 சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை-31, சேத்துப்பட்டு, கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது
No comments:
Post a Comment