Breaking

Friday, December 20, 2024

பள்ளிகளில் 8997 காலி பணியிடங்கள் அறிவிப்பு


சத்துணவு திட்டத்தில் 8997 காலி பணியிடங்கள்

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் 8,997 காலி பணியிடங்களை நிரப்பிட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அனுமதி.

தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அதை நிரப்ப இப்போது சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

சமையல் உதவியாளர்கள்:

இந்த சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திடச் சமையல் உதவியாளர்களை வேலைக்கு எடுக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியத்தில் இந்த காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி என்ன:

இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10வது தேர்ச்சி/தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதற்காக இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment