Join THAMIZHKADAL WhatsApp Groups
வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநில தொழில்நுட்பக்கல்வி ஆணையரும், தொழில்நுட்பத்தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16-ம் தேதியும், சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24-ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை அதிவேக தேர்வுகள் மார்ச் 1 மற்றும் 2-ம் தேதியும் நடைபெற உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 16-ம் தேதி (இன்று) தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tndtegteonline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17-ம் தேதி ஆகும். அதன்பிறகு ஜனவரி 19-ம் தேதி வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்தில் ஜனவரி 19 முதல் 21-ம் தேதிக்குள் திருத்தம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment