Join THAMIZHKADAL WhatsApp Groups
''காழ்ப்புணர்ச்சி காரணமாக சக ஆசிரியர்களை வீடியோ எடுத்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவது கெட்ட பெயரை ஏற்படுத்தும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் காட்டமாக பேசினார்.
அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டம், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் தலைமையில், கோவை, கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில் நேற்று துவங்கியது. இன்றும் நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தலைமையாசிரியர்கள் என,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கல்வி அதிகாரிகள் மத்தியில்அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
ஆசிரியர்கள் தனிப்பட்ட பிரச்னை,காழ்ப்புணர்ச்சிகாரணமாக சக ஆசிரியர்களை அவர்களுக்கு தெரியாமல், வீடியோ எடுத்து ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிர்கின்றனர். உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி, பள்ளி கல்வித்துறைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகின்றனர்.
சுய விருப்பு, வெறுப்புக்காக அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது. எதிர்மறை வீடியோ பதிவுகளை பார்க்கும் மாணவர்களும், பாதிப்புக்கு ஆளாகின்றனர். தனிப்பட்ட வெறுப்பை பள்ளி வளாகத்துக்கு வெளியே போய் வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அதுவும், கல்வித்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும், தற்காலிக ஆசிரியர்களிடம் பாரபட்சம் காட்டாமல்,அவர்களை ஊக்குவித்து கல்வித்திறனை மேம்படுத்த வேண்டும்.
தங்களை சுயபரிசோதனை செய்து, அடுத்தகட்ட நிலைக்கு மேம்படுத்திக்கொள்வது அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment