Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக அரசுப் பள்ளிகளில் AI கல்வி குறித்த பாடப் பிரிவு விரைவில் தொடங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச் சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி தெரிவித்தார்.
கோவை மாவட்டம் குலூர் அருகே கண்ணம்பாளையத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து ஆய்வுக் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசும்போது, மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்களில் பள்ளி ஆசிரியர்களை அழைத்து அவர்கனை ஊக்குவிப்பதன் மூலம் குறை கனைக்குறைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. தற்போது ஒவ் வோர் ஆண்டும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துவருகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட ஒரே மாநில அரசு தமிழ்நாடு மட்டும்தான். தமிழக பள்ளி களில் எஐ தொழில்நுட்ப கல்வி குறித்தான பாடப்பிரிவு விரைவில் தொடங்கப்படும். அதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்றார்.
குலூர் அருகே உள்ள அரசூர் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பாராட்டி மாணவர்களுக்கு புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்.
No comments:
Post a Comment