தமிழக அரசின் கேள்வி இயங்கும் தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரி திட்ட துறையின் சார்பில் பொதுமக்கள் பட்டா பற்றிய விவரங்களை அறிய தமிழ் நிலம் என்ற செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயலியில் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக கோரலாம். மேலும் பட்டா ,சிட்டா பார்வையிட ,மாற்று சரிபார்க்க, அரசு புறம்போக்கு நில விபரம், நகர நில அளவை வரைபடங்கள் மற்றும் விவசாயிகள் விபர பதிவேடு உள்ளிட்ட அனைத்து நிலம் சார்ந்த விவரங்களையும் இச்செயலையில் அறிந்து கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பை ஒன்றி வெளியிட்டுள்ளது. அதில் என்னவென்றால் தமிழ் நிலம் செயலியில் விவசாயிகள் விபர பதிவேடு தொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று (28.12.24) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அதாவது மாலை 4 மணி வரை "தமிழ் நிலம்" செயலியை என்ற இணையவழி பட்டாசேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



No comments:
Post a Comment