Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு டோக்கன்:
பொங்கல் பரிசு டோக்கன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி மாதம் 9 (9.1.2025) தேதி முதல் சுழற்சி முறையில் விநியோகம் மேற்கொள்ள குடும்ப அட்டைகள் பிரிக்கப்பட்டு கணக்கிடப்பட்டு தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும் அதன் அடிப்படையில் அட்டைதாரர் பரிசுத்தொகுப்பு பெற வேண்டிய நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் ரேஷன் அட்டைதாரர்களின் சென்று வழங்கப்பட உள்ளனர்.
முதல் நாள் முற்பகல் 100 பேருக்கும் பிற்பகல் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment