பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறையாக அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14-ஆம் தேதி, ஜனவரி 15ஆம் தேதி ,ஜனவரி 16ஆம் தேதி என மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கும் வருசத்தில் மறுநாள் சனி, ஞாயிறு வார விடுமுறை வந்துவிடும் எனவே சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



No comments:
Post a Comment