Join THAMIZHKADAL WhatsApp Groups
பல்வேறு தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் - 2024 முதல் ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு!
பள்ளிக்கல்வி 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் 31 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 16 உயிர் வேதியியல் (Bio Chemistry) மற்றும் 31 நுண் உயிரியல் (Micro Biology) ஆக மொத்தம் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது இப்பணியிடங்களுக்கு 01.09.2021 முதல் 31.08.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது -
அதனை தொடர்ந்து 01.09.2024 முதல் 30.11.2024 வரை பள்ளிக் கல்வி இயக்குநரால் விரைவு ஊதிய கொடுப்பாணை வழங்கப்பட்டது தற்போது 01.12.2024 முதல் 31.05.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization) வழங்குதல் - தொடர்பாக.
1. அரசாணை (நிலை) எண்.188, பள்ளிக்கல்வித் [மேநிக2] துறை, நாள். 24.07.2012.
2. அரசாணை (நிலை) எண்.208, பள்ளிக்கல்வித் [மேநிக2] துறை, நாள். 13.08.2012.
3. அரசாணை (1டி) எண்.232, பள்ளிக்கல்வித்[பக5(1)]துறை, நாள். 29.11.2021.
4. பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறை ந.க. எண். 031627/எல்/இ3/2021, நாள். 11.09.2024.
5. பள்ளிக்கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.031627/எல் / இ3/2021, நாள். 20.11.2024.
பார்வை 1-இல் காணும் அரசாணையில் 2012-2013-ஆம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வியினை மேம்படுத்தும் வகையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவில் உயிர் வேதியியல் (Bio Chemistry), நுண் உயிரியல் (Micro Biology) ஆகிய பாடப் பிரிவுகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படவும், தரமான மேல்நிலைக் கல்வியினை அவர்கள் பெறும் பொருட்டும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 16 உயிர் வேதியியல் முதுகலை ஆசிரியர் மற்றும் 31 நுண் உயிரியர் முதுகலை ஆசிரியர் என மொத்தம் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.
மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் மேற்காண் 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு அனுமதி அளித்தும் ஆணை வெளியிடப்பட்டது. பார்வை 3- இல் காணும் அரசாணையில், பார்வை 1-இல் காணும் அரசாணையில் தோற்றுவிக்கப்பட்ட 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.09.2021 முதல் 31.08.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 4-இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.09.2024 முதல் 30.11.2024 வரை 3 மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை வழங்கப்பட்டு முடிவுற்ற நிலையில், 01.12.2024 முதல் 31.05.2025 160 ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பார்வை 5-இல் காணும் கடிதத்தில் பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதத்தில் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்குறிப்பிட்டுள்ள 47 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.12.2024 முதல் 31.05.2025 வரை ஆறு மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.12.2024 முதல் 31.05.2025 வரை ஆறு மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதித்(சம்பளம்) துறை, நாள்.22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு பகிர்வின்படி வெளியிடப்படுகிறது.
பார்வை 1 மற்றும் 2-இல் காணும் அரசாணைகளில் 2014-2015- ஆம் கல்வியாண்டில் இருபாலர் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிரை பிரித்து புதிதாக முறையே 11 அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளும், 9 அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளும் துவக்கிட அனுமதி அளித்தும், அவ்வாறு துவக்கப்பட்ட அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளிகளுக்கு முறையே 11 மற்றும் 9 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 20 தலைமையாசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்தும் ஆணைகள் வெளியிடப்பபட்டன. பார்வை 3-இல் காணும் அரசாணையில் இப்பணியிடங்களுக்கு 01.06.2021 முதல் 31.05.2024 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டது. பார்வை 4-இல் காணும் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி இப்பணியிடங்களுக்கு 01.06.2024 முதல் 31.08.2024 வரை மூன்று மாதங்களுக்கு விரைவு ஊதிய கொடுப்பானை (Express Pay Order) வழங்கப்பட்டது. பார்வை 5-இல் காணும் அரசு கடிதத்தில் இப்பணியிடங்களுக்கு 01.09.2024 முதல் 30.11.2024 வரை ஊதிய கொடுப்பாணை முடிவுற்ற நிலையில், 01.12.2024 முதல் 31.05.2025 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை (Pay Authorization) வழங்குமாறு பள்ளிக்கல்வி பார்வை 6-இல் காணும் கடிதத்தில் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இயக்குநர்
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, மேற்குறிப்பிட்டுள்ள 20 தற்காலிக தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.12.2024 முதல் 28.02.2025 வரை மூன்று மாதங்களுக்கு ஊதியம் பெற்று வழங்க ஏதுவாக ஊதிய கொடுப்பாணை (Pay Authorization) வழங்கப்படுகிறது. மேற்படி அலுவலர்களுக்கான 01.12.2024 முதல் 28.02.2025 வரை மூன்று மாதங்களுக்கான சம்பளம் மற்றும் இதர படிகளுக்கான ஊதியப் பட்டியல்கள் உரிய அலுவலர்களால் சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், அவை ஏனைய இனங்களில் சரியாக இருக்கும் நிலையில், ஏற்றுக் கொண்டு ஊதியம் பெற அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அளிக்கப்பட்டுள்ள அதிகாரப் 3. இக்கடிதம், அரசாணை (நிலை) எண்.334 நிதி(சம்பளம்)துறை, நாள். 22.10.2022-இல் துறைச் செயலாளருக்கு பகிர்வின்படி வெளியிடப்படுகிறது.
Pay Authorization Order CLICK HERE TO DOWNLOAD PDF
No comments:
Post a Comment