Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் HMPV சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் 2, தமிழ்நாட்டில் 2, குஜராத்தில் 1 என நாடு முழுவதும் இன்று ஒரே நாளில் 5 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் HMPV பாதிப்பு - அச்சப்பட வேண்டாம்"
"தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த
HMPV பாதிப்புகள் இல்லை, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை
HMPV வைரஸ் காய்ச்சல் நீண்டகாலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான்
சீனாவில் இருப்பது போல் உருமாற்றம் அடைந்த HMPV வைரஸ் எதுவும் தமிழகத்தில் இல்லை"- பொது சுகாதாரத்துறை
HMP வைரஸ் புதியதல்ல: தமிழக சுகாதாரத் துறை
HMP வைரஸ் புதியதல்ல; 2001இல் முதன்முதலில் கண்டறியப்பட்ட வைரஸ்தான் HMP வைரஸ் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது; இருவரின் உடல் நிலை சீராக உள்ளது; அவர்கள் தொடந்து கண்காணிக்கப்படுகின்றனர்-தமிழக சுகாதாரத் துறை.
அச்சப்பட ஒன்றுமில்லை“HMP வைரஸில் அச்சப்பட ஒன்றுமில்லை.
இது லேசான சுவாச நோய்த் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. சளி இருந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முகக் கவசம் அணியுங்கள், கைகளை நன்றாகக் கழுவுங்கள், கூட்டத்தை தவிருங்கள், கடுமையான அறி குறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்”
-சௌமியா சுவாமிநாதன், WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி
No comments:
Post a Comment