Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 13, 2025

பொங்கல் வைக்க நல்ல நேரம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரம் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையான தைப்பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரம்:

pongal festival 2025

போகி பண்டிகை:

தைப்பொங்கலுக்கு முந்தின நாள் தான் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையானது மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படும். விவசாயத்திற்கு உதவிய கடவுள் இந்திரனை இந்நாளில் வழிபட்டு வணங்குவார்கள். இந்நாளில் தான் அறுவடை செய்த அரிசியை வீட்டிற்கு மக்கள் கொண்டு வருவார்கள். முக்கியமாக போகி பண்டிகை நாளில் தான் வீட்டில் இருக்கும் தேவையில்லாத மற்றும் பழைய பொருட்களை தீயில் எரிப்பார்கள்.

தைப்பொங்கல்:

உங்களின் இரண்டாவது நாளில்தான் தைப்பொங்கல் வருகிறது. இதுதான் முக்கியமானது. ஏனெனில் இதுதான் தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் நாள் ஆகும். எனவே இந்நாளில் மக்கள் அறுவடை செய்த அரசியை பொங்கலுக்கு சூரிய பகவானுக்கு படைத்து நன்றி சொல்வார்கள். 

பொங்கல் வைக்க உகந்த நேரம்:

காலை 7.55 முதல் 9.29 வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் ஆகும்.

மாட்டுப் பொங்கல்:

மாட்டுப் பொங்கல் தை இரண்டாம் நாளில் தான் மாட்டுப் பொங்கல் வருகிறது. விவசாயிகளின் விவசாயத்திற்கு உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தான் இந்த பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் நாளில் மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, அவற்றிற்கு பொங்கல் வைத்து படைத்து வழிபடுவார்கள். 

மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம்:

காலை 9.30 முதல் மதியம் 10.30 மணி வரை ஆகும். 
அதுபோல மாலை 4:30 முதல் 5 30 மணி வரை மாட்டுப்பொங்கல் வைக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News