Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 31, 2025

"ஒரு நாள் மாவட்ட ஆட்சியர்" - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நிஜ கலெக்டர்



காரைக்காலில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அரசு பள்ளி மாணவி, தேர்வு செய்யப்பட்டு

மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களுடன் இணைந்து இன்று பணியாற்றினர்.

காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற வாய்ப்பு தரப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அறிவித்து இருந்தார்.

அதன்படி காரைக்கால் மேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வித்யாஸ்ரீ ஒருநாள் கலெக்டராக பணியாற்ற முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


மாணவி கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் மணிகண்டன் ஆய்வு செய்யும் இடங்களில் மாவட்ட கலெக்டராக இணைந்து பணியாற்றுவார்.

இன்று நடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மணிகண்டனுடன் இணைந்து ஒரு நாள் கலெக்டராக தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி வித்யாஸ்ரீ விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மாவட்ட நிர்வாக செயல்பாடுகள், பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் மற்றும் வளர்ச்சி திட்ட செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும்...


எதிர்காலத்தில் மாணவர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவும்... ஆட்சியர் மணிகண்டன் அறிவுறுத்தலின்படி ஆட்சியராக பணியாற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது... அதன்படி ஆக நிரவி பகுதி அரசு பள்ளியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தஸ்னீம் அர்ஷியா ஒருநாள் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


ஆட்சியர் மணிகண்டன் உடன் இணைந்து மாதந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று குறைகளை கேட்டறிந்தார்... அவருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கான ஊக்கம், அவர்களின் ஆளுமை திறனை மேம்படுத்தும் என்பதால் மாதம் இரண்டு மாணவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment