Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, February 18, 2025

தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல்!


தமிழக பட்ஜெட் மார்ச் 14-ல் தாக்கல் செய்யப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மாா்ச் 14 ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கடந்த 10 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, இந்த பட்ஜெட்டை மார்ச் 14 ஆம் தேதி காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் புதிய சலுகைகள் குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில் ஏற்கனவே இருக்கும் நிதிச்சுமைக்கு மத்தியில், மத்திய அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் முழுமையாக கிடைக்கப் பெறாததாலும் இந்த பட்ஜெட் தமிழக அரசுக்கு சவாலான பட்ஜெட்டாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

மக்களைக் கவரும் திட்டங்கள் குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் என்பதால் மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், பெண்களுக்கான திட்டங்கள் மற்றும் அவர்களுக்கான நிதியுதவி குறித்த அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment