Join THAMIZHKADAL WhatsApp Groups
கத்தரி ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 30 மைக்ரான் சீட் 100 கிலோ தேவைப்படும்.வரிசைக்கு வரிசை 5 அடி செடிக்கு செடி 1.5அடி இடைவெளி என்ற அளவில் துளையிட்டு அவற்றில் நாற்றுக்களை நடவு செய்யனும்.
நடவு செய்த 50 நாட்களுக்குள் செடியை பந்தலில் தூக்கி கட்டிவிட வேண்டும்.
பந்தலில் கட்டிவிட்டால் வெயிலின் தாக்குதல், எலி தொல்லை முதலிய வற்றிலிருந்து கத்தரியை பாதுகாக்கலாம். செடியும் வாடாமல் ஒடியாமல் இருக்கும.;
நிலப்போர்வை அமைப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால் களையை கட்டுப்படுத்தலாம் நமக்கு ஈரப்பதம் பயிருக்கு கிடைக்கும தண்ணீர் செலவு குறையும்.
சாறுறிஞ்சும் பூச்சியின் தாக்குதல் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு 10 இடங்களில் மஞ்சள் அட்டை வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
இலைப்புள்ளி நோய், வாடல்நோய், கருகல்நோய் தென்பட்டால் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் சூடோமோனஸ் என்ற அளவில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
காய்ப்புழு, தண்டுப்புழு தாக்காமல் இருக்க பிவேரியா, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் அளவில் தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கியாக பஞ்சகவ்யா ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற விகிதத்தில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்தால் கத்தரிக்காய் பசுமை மாறாமலும் நல்ல பளபளப்புடனும் சமைக்கும் பொழுது சுவையாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment