Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 12, 2025

காவடி பிறந்த கதை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அகத்தியர் தன் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து தனது வழிபாட்டிற்காகக் கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி வடிவான சிவமலை, சக்திமலை எனும் இரு மலைகளைக் கொண்டுவரும்படி பணித்தார்.

அவ்வாறே இடும்பனும் கயிலைக்குச் சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்குமாறு ஒரு கம்பில் காவடியாய் கட்டி எடுத்துக்கொண்டு வந்தான். முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைப்பெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி,

இடும்பன் வழித்தெரியாமல் திகைத்தபோது முருகன் குதிரைமீது செல்லும் அரசனைப்போல் தோன்றி இடும்பனை திருவாவினன்குடியில் சற்று ஓய்வெடுத்துச் செல்லுமாறு கூறினார்.

இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து, பின் புறப்படும்போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். இவ்வளவு நேரம் சுமந்து வந்த காவடியை இப்போது தூக்க முடியாதக் காரணத்தை ஆராய்ந்த போது , சிவமலையின்மீது ஒரு சிறுவன் கோவனத்துடனும், கையில் தண்டத்துடனும் நிற்பதை கண்டு, மலையிலிருந்து இறங்குமாறு பணித்தான். ஆனால், சிறுவனோ, இம்மலை எனக்கே சொந்தம் என சொந்தம் கொண்டாடினான்.

கோபமுற்ற இடுமபன் சிறுவனைத்தாக்க முயல, வேரற்ற மரம்போல் இடும்பன் விழுந்தான்.

இதை உணர்ந்த அகத்தியரும், இடும்பனின் மனைவியுடன் சென்று முருகனை வேண்ட இடும்பனுக்கு அருளி அவனை உயிர்பித்து தன் காவல்தெய்வமாகவும் உயிர்பித்தார். அப்போது இடும்பன், தன்னைப்போல காவடியேந்தி பால், சந்தன, மலர், இளநீர் போன்ற அபிஷேகபொருட்களை கொண்டு வந்து உம்மை வணங்குபவர்களது பிணி நீங்க அருள்செய்ய வேண்டுமென வரம் கேட்டான். அவ்வாறே முருகனும் அருளினார். அன்றுமுதல் முருகனுக்கு காவடி எடுக்கும் வழக்கம் இன்றளவும் உள்ளது.

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும், துன்பமும் இரண்டு சுமைகளாக சரிசமமாக இருக்கிறது, மனிதனாய் பிறந்தவன் இவ்விரு துன்பங்களைத் தாங்கித்தான் ஆகவேண்டும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News