Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் பரவலாக மழை இல்லையென்றாலும், சளி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதனால் மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளை கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்ஃபுளுயென்சா தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
இன்ஃபுளுயென்சா தடுப்பூசி குறித்து கர்ப்பினி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருமல், சளி உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
இருமல், சளி, காய்ச்சல் உள்ள நோயாளிகள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும்.
No comments:
Post a Comment